சுற்றுலா விசாவில் பிரான்ஸ் வேலையா? வருவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை (2026)

Read this in English / ஆங்கிலத்தில் படிக்க

ஆசிய நாடுகளில் இருந்து – இந்தியா, இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து – பலர் ஏஜென்ட்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிரான்ஸ் வருகிறார்கள். ஆனால் வருவதற்கு முன் சில அடிப்படை உண்மைகளை தெரிந்து கொள்ளாவிட்டால், அந்த கனவு விரைவில் ஒரு கடுமையான பிரச்சனையாக மாறிவிடும். சுற்றுலா விசாவில் பிரான்ஸ் வேலை செய்யலாம் என்று நம்பி வர நினைப்பவர்களுக்காகவே இந்தக் கட்டுரை.

அக்டோபர் 2026 புதுப்பிக்கப்பட்டது

1டூரிஸ்ட் விசா என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்

நீங்கள் பிரான்ஸுக்கு டூரிஸ்ட் விசாவில் (சுற்றுலா விசா) வந்தால், அது உங்களை சுற்றி பார்க்க அனுமதிக்கும் விசா — பிரான்ஸில் நிரந்தரமாக தங்க வைக்கும் விசா அல்ல. இது 180 நாட்களில் அதிகபட்சம் 90 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும், மற்றும் இதில் வேலை செய்யும் உரிமை எதுவும் இல்லை.

2விசா முடிந்தவுடன் என்ன நடக்கும்

90 நாட்கள் முடிந்தவுடன் நீங்கள் ஆவணமற்றவர் ஆகிவிடுவீர்கள். எந்த முதலாளியும் உங்களைச் சட்டப்படி வேலைக்கு வைக்க முடியாது. பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் வீடு தர மாட்டார்கள். சாதாரண மருத்துவக் காப்பீட்டு உரிமையும் இருக்காது (சில நிபந்தனைகளுடன் AME என்ற அரசு மருத்துவ உதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்).

அனுமதி இல்லாத வெளிநாட்டவரை வேலைக்கு வைப்பதைச் சட்டம் தடை செய்கிறது (Code du travail, L.8251-1) — இதற்காக முதலாளிக்குக் கடுமையான தண்டனை உண்டு. உங்களுக்கோ ஒப்பந்தம் இல்லை, பாதுகாப்பு இல்லை, எதிர்கால விசா விண்ணப்பத்திலும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.

3உண்மையான ஆபத்து: OQTF மற்றும் திரும்ப வர தடை

போலீஸ் சோதனையில் பிடிபட்டால், OQTF (பிரான்ஸை விட்டு வெளியேற உத்தரவு) விதிக்கப்படலாம். அதோடு பல சமயம் 5 வருடங்கள் வரை பிரான்ஸுக்குத் திரும்ப வரத் தடையும் (IRTF) விதிக்கப்படலாம். நடைமுறையில் இந்தத் தடை முழு ஷெங்கன் பகுதிக்கும் பொருந்தும் (CESEDA, L.612-6 முதல் L.612-8 வரை, 26 ஜனவரி 2024 சட்டப்படி) — இது உங்கள் எதிர்கால சட்டப்பூர்வ விசா வாய்ப்பையே அழித்துவிடும்.

4வருடக்கணக்கில் தங்கினால் தானாக சட்டப்பூர்வமாகிவிடாது

தற்போதைய விதிப்படி (23 ஜனவரி 2025 சுற்றறிக்கை), விதிவிலக்கான சட்டப்பூர்வமாக்கல் (admission exceptionnelle au séjour) பொதுவாக 7 வருடங்கள் தொடர்ச்சியான, ஆவணப்படுத்தப்பட்ட இருப்பை முக்கிய அளவுகோலாகக் கொள்கிறது. இது முழுமையாக prefect-இன் முடிவைப் பொறுத்தது, எந்த உத்தரவாதமும் இல்லை.

5பிரெஞ்சு மொழி தெரியாவிட்டால் சுரண்டலுக்கு ஆளாகும் நிலை உருவாகலாம்

பிரெஞ்சு தெரியாமல் இருந்தால் வேலை தேட முடியாது, உரிமைகளை கேட்க முடியாது, உதவி கேட்க முடியாது. இதன் விளைவாக சிலர் உங்களை சுரண்டவும், குறைந்த ஊதியத்திற்கு அதிக நேரம் வேலை வாங்கவும் செய்வார்கள். வருவதற்கு முன் 100 வீதம் யோசித்து, முடிந்தவரை பிரெஞ்சு மொழியை கற்றுக்கொண்டு தயாராக வாருங்கள்.

6வேலை விசா பெறுவதற்கான உண்மையான வழிமுறை

பணம் கொடுத்து வேலை விசாவை “வாங்கும்” முறை பிரான்ஸில் கிடையாது. உண்மையான வழிமுறை இதுதான்:

  1. பிரான்ஸில் உள்ள ஒரு நிறுவனம் உங்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க வேண்டும்.
  2. அந்த நிறுவனம் உங்களுக்காக அரசிடம் இருந்து சட்டரீதியான வேலை அனுமதி (autorisation de travail) பெற வேண்டும்.
  3. அந்த அனுமதியை நிறுவனம் உங்களுக்கு அனுப்ப வேண்டும்.
  4. அதை வைத்து நீங்கள் உங்கள் நாட்டில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

“என்னிடம் வேலை விசா உள்ளது, பல லட்சம் கொடுங்கள்” என்று யார் சொன்னாலும் நம்பாதீர்கள். சந்தேகம் இருந்தால், முடிந்தவரை பிரெஞ்சு தூதரகத்தில் நேரடியாக சரிபார்த்து உறுதி செய்துகொண்டு வாருங்கள்.

முக்கிய குறிப்புகள்

  • டூரிஸ்ட் விசா = பார்வைக்கு மட்டும், தங்குவதற்கு அல்ல, வேலைக்கு அல்ல.
  • ஆவணமின்றி இருப்பது OQTF-க்கும், 5 வருடங்கள் வரை திரும்ப வரத் தடைக்கும் வழிவகுக்கலாம்.
  • சட்டப்பூர்வமாக்கலுக்கு (régularisation) பொதுவாக 7 வருட இருப்பு முக்கிய அளவுகோல் — அப்போதும் உத்தரவாதம் இல்லை.
  • பிரெஞ்சு மொழி தெரியாவிட்டால் சுரண்டலுக்கு ஆளாகும் அபாயம் அதிகம்.
  • உண்மையான வேலை விசா எப்போதும் ஒரு நிறுவனத்தின் மூலமே வரும் — ஏஜென்ட் மூலம் அல்ல.

இங்கு வருபவர்களைச் சுரண்டி லாபம் பார்க்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்கள் உள்ளன என்பதை மறக்காதீர்கள். நேர்மையான வழியில் உங்களை வழிநடத்தாமல், சட்டவிரோத வழிகளில் விசா பெற அறிவுரை கூறும் நபர்கள் அதிகம். பிரான்ஸுக்கு வர யோசித்தால், அல்லது உங்கள் நெருங்கியவர் ஏற்கனவே ஆவணமின்றி இங்கு இருந்தால், முதலில் உண்மையான தகவலை பெறுங்கள். முடிவெடுக்கும் முன் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் — +33 9 70 70 04 64.

Legal basis: Regulation (EU) 2016/399 (Schengen Borders Code), French Labour Code Article L.8251-1, CESEDA (Code on the Entry and Residence of Foreigners and the Right of Asylum) Article L.611-1 et seq. (OQTF – Obligation to Leave French Territory), CESEDA Articles L.612-6 to L.612-8 as amended by Law no. 2024-42 of 26 January 2024 (IRTF – Ban on Return to French Territory), CESEDA Articles L.435-1 and L.435-4 (AES – Exceptional Admission to Stay), and the Circular dated January 23, 2025.
இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்கு மட்டுமே; உங்கள் தனிப்பட்ட சூழ்நிலையின் தனி மதிப்பாய்வுக்கு இது மாற்றாகாது. TSA FIIC உங்கள் கோப்பை (dossier) தொடக்கம் முதல் முடிவு வரை தயாரித்து ஒருங்கிணைக்கிறது; சட்டப் பிரதிநிதித்துவம் தேவைப்படும்போது எங்கள் partner lawyers அதைக் கையாள்வார்கள்.

Explide
Drag